முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள கொண்டுசெல்லப் படும் தளவாடப் பொருட்களை கேரள அரசு தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மத்தியக் கண்காணிப்பு குழு அறிவித்திருந்தது. அதற்கெதிராக, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள் ளத் தளவாடப் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரிகளை கேரள வனத்துறை அனுமதிக்காததால் வல்லக்கடவு சோதனைச் சாவடியில் நிறுத்திவைத்துள்ளனர்.

Advertisment

ff

கடந்த மாதம் இந்தக் குழுவை கலைத்து விட்டு முல்லைப் பெரியாறு மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கடந்த ஏழு மாதங்களாக அணைப் பராமரிப்புப் பணிகளைச் செய்ய விடாமல் கேரள அரசு தடுத்துவந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் அணை பராமரிப்புப் பணிக்காக இரண்டு லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட எம்.சான்ட் லோடை வல்லக்கடவு சோதனைச் சாவடியில் மலையாளிகள் தடுத்துநிறுத்தி யுள்ளனர். இந்த விஷயம் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் முல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவசாய சங்கங்களுக்கு தெரியவே, விவசாயிகள் கேரள அரசைக் கண்டித்து லோயர் கேம்பிலுள்ள குமுளிக்குச் செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் என்ற பென்னிகுக், “"கேரளாவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும், அணை பலவீனமாக இருப்பதாக வும் சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசிவந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது அணைக்கு எதிராக கேரள அரசே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணையின் பராமரிப்பிற்கு கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை மைனர் எரிகேசன் டிபார்ட்மெண்ட் தற்போது தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்களுக்கு அந்த அதிகாரமே கிடையாது. வனத்துறை கட்டுப் பாட்டில்தான் முல்லைப் பெரியாறு அணையே இருக்கிறது. அதனால் எப்போதும் கேரள வனத் துறை அதிகாரியிடம் அனுமதிபெற்று அணை யின் பராமரிப்பு பணிக்கான பொருட்களை கொண்டுசெல்வது வழக்கம். தற்போது நீர்நிலைத் துறை இதில் உள்ளே நுழைந்து பராமரிப்புப் பணிக்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

Advertisment

far

இதனால் கடந்த நான்கு நாட்களாக வல்லக்கடவு சோதனைச்சாவடியில் மணலுடன் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விசயத்தை உயரதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாறு பாதுகாப்புப் பணியில் இருக்கக் கூடிய அதிகாரிகள் தெரிவித்தும்கூட தமிழக அரசு மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருவது வருத்தமாக இருக்கிறது. நமது தேனி கலெக்டர் ஷஜீவனா, கேரளா இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரியிடம் பேசினாலே இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் கலெக்டரும் இதில் கவனம்செலுத்தாமல் இருந்துவருகிறார். இந்த நிலை தொடர்ந்து நீடித் தால் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகள் செய்யமுடியாமல் போக வாய்ப்பிருக் கிறது. இந்த முல்லைப் பெரியாறை நம்பித்தான் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டத்தைச் சேர்ந்த பத்து லட்சம் விவசாயிகள் இருக்கின்றனர். இதன் மூலம் 8 லட்சம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுகிறது. அதனால் இந்த பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்.

far

Advertisment

இது சம்பந்தமாக முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியா ளர் குமாரிடம் கேட்ட போது... “"தற்போது புதிதாக கேரளா நீர்ப்பாசன துறை யிடம் அனுமதி வாங்கிய பின்புதான் தளவாடப் பொருட்களைக் கொண்டு செல்லவேண்டும் என்று கூறு கிறார்கள். நாங்கள் அவர் களிடம் போய்க் கேட்டால் எங்கள் ஊஞவிடம் சொல்லியிருக்கிறோம். தகவல் வந்தவுடன் சொல்கிறோம் என்று கூறி இழுத் தடித்துவருகிறார்கள். அதனால் கடந்த நான்கு நாட்களாக இரண்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணலை தடுத்துநிறுத்தி வைத்தி ருக்கிறார்கள். விசயத்தை எங்கள் உயரதிகாரி களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். கடந்த சில மாதங்களாகவே அணையில் எந்த ஒரு பரா மரிப்பு பணி தொடங்கினாலும் அதை செய்யக் கூடாது என கேரள போலீசாரும், அதிகாரி களும் தடுத்துவிடுவார்கள். அதனாலேயே பரா மரிப்பு பணிகள் சரிவர செய்ய முடியவில்லை. அதை கண்டித்துதான் கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு ஆய்வுப் பணிக்கு குமுளிக்கு வந்த துணைக் கண்காணிப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்று கூறினார்.

இதுசம்பந்தமாக தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வனிடம் கேட்ட போது, “"இதுசம்பந்தமாக கலெக்டரிடம் பேசி யிருக்கிறேன். அவர் உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். இருந்தாலும் இனிவரும் காலங்களில் முல்லைப் பெரியாறு அணைக்கு பராமரிப்பு பணிக்கு செல்லக்கூடிய தளவாடப் பொருட்களை கேரளா அரசு தடுக் காத அளவிற்கு தமிழக அரசு அதிரடி நட வடிக்கை எடுக்கும்''’என்றார். இது குறித்து சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனத் தெரிகிறது.

-சக்தி